உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக சமுதாய சேவா சங்க மண்டல வளர்ச்சிக் கூட்டம்

உலக சமுதாய சேவா சங்க மண்டல வளர்ச்சிக் கூட்டம்

விழுப்புரம், : உலக அமைதி வேண்டி உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் விழுப்புரம் மண்டல வளர்ச்சிக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் பாலாஜி அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, சங்க துணை தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், இயக்குனர் பெருமாள் முன்னிலை வகித்தனர். விரிவாக்க இணை இயக்குனர்கள் அருள்ஜோதி, அருட்செல்வி சிறப்புரையாற்றினர்.மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினார். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மண்டல செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி