உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உலக சிலம்பம் தின விளையாட்டு போட்டி

 உலக சிலம்பம் தின விளையாட்டு போட்டி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே முட்டத்துாரில் உலக சிலம்பம் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி நடந்தது. முட்டத்துாரில் நமது சிலம்பம் குழு சார்பில் நடந்த சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் எசாலம், எண்ணாயிரம், வேம்பி,கஞ்சனுார், குன்னத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட நேரு யுவகேந்திரா முன்னாள் ஆலோசகர் சக்திவேல் சான்றிதழ், கேடயங்களை வழங்கி கவுரவித்தார். பயிற்சியாளர் சுரேந்தர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்