உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக காசநோய் தின விழா 

உலக காசநோய் தின விழா 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் உலக காசநோய் தின விழா நடந்தது.விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (காசநோய்) சுதாகர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா முன்னிலை வகித்தார்.துணை இயக்குனர் சுதாகர் (தொழுநோய்), அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ அலுவலர் துரைராஜ், தொற்றா நோய் பிரிவு அலுவலர் விவேகானந்தன், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் லதா, நித்யா, கார்த்திகேயன் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள், காசநோய் பிரிவு அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.விழாவில், காச நோய் பாதிப்புகள், பரவல் குறித்தும், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி டாக்டர்கள் பேசினர்.தொடர்ந்து, காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் காச நோயில்லா ஊராட்சிகளை ஏற்படுத்தியமைக்காக 19 ஊராட்சி தலைவர்களுக்கு வெள்ளி, வெண்கல பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ