உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சோலைவாழியம்மன் கோவிலில் வழிபாடு

சோலைவாழியம்மன் கோவிலில் வழிபாடு

மயிலம் : மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, சோலை வாழி அம்மனுக்கு தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் வழிபாடு நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், அய்யனாரப்பன் சுவாமி, சப்த கன்னிமாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை