உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் அணைக்கட்டுக்கு பூஜை

செஞ்சியில் அணைக்கட்டுக்கு பூஜை

செஞ்சி: செஞ்சியில் அணைக்கட்டிற்கு பூஜை செய்து, 2400 மரக்கன்றுகள் நடப்பட்டன. நதிகள் புத்துயிருட்டும் தினத்தை முன்னிட்டு செஞ்சி பகுதியில் உள்ள நீர்நிலை பாதுகாப்பு அமைப்பினர், நீர்நிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். செவலபுரை கிராமத்தில் வராக நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களை துாவி சிறப்பு வழிபாடு நடத்தினர். பசுமலைதாங்கல் கிராமத்தில் சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத கரம்பு நிலங்களில் ஈஷா காவேரி கூக்குரல் நிறுவனம் சார்பில் 2400 மரக்கன்றுகளை நட்டனர். இதில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க வல்லம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜோலதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் அறவாழி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் தங்கராஜ், சமூக ஆர்வலர் ராமமூர்த்தி, காங்., விவசாய அணி செஞ்சி வட்ட தலைவர் அன்புச் செழியன் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சங்கம், விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !