உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை சார்பில், யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. விழுப்புரம் வண்டிமேடு, வழக்கறிஞர் நகரில் நடைபெற்ற முகாமில், செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். வேதாத்திரி மகரிஷியின் யோகா உடற் பயிற்சி குறித்து பேராசிரியர் முத்துக்குமரன் செய்முறை விளக்கம் அளித்தார். மகளிருக்கான பயிற்சியை பேராசிரியர் பானுமதி, தேன்மொழி, சுதா சரவணன், கோமதி, சுதா ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். தியான பயிற்சி குறித்து பேராசிரியர் தட்சணாமூர்த்தி, காயகல்ப பயிற்சி குறித்து பேராசிரியர் தனஞ்செயன் ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் கண்ணன், ராஜா, கார்த்திகேயன், ஸ்ரீதர், சந்தோஷ், சரவணன், துரை கருணாநிதி, உதயகுமார், செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ