உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் : அரசு போக்குவரத்துக் கழகத்தில் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குநர் குணசேகரன் செய்திக் குறிப்பு: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தென் மண்டல தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில், படித்த இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழிற் பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் பட்டம், பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு போக்குவரத்துக் கழகம் மூலம், விழுப்புரம், கடலுார், ேவலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு http://nats.education.gov.inஎன்கிற இணைய தள முகவரியில் பார்வையிட்டு, வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ