75 வயது மூதாட்டி பலாத்கார முயற்சி திண்டிவனத்தில் வாலிபர் கைது
திண்டிவனம்: திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி. இவர் நேற்று முன்தினம் தனது கூரை வீட்டில் படுத்திருந்தார். அதிகாலை 2:00 மணியளவில், வாலிபர் ஒருவர் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். மூதாட்டி சத்தம் போடவே, வெளியில் படுத்திருந்த மூதாட்டியின் மகன் அய்யனார் ஓடி வந்தார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் அய்யனார் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் திண்டிவனம் அய்யந்தோப்பு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் பத்மநாபன், 29; என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என, தெரிந்தது. அதையடுத்து, பத்மநாபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.