மேலும் செய்திகள்
மாட்டின் மீது மோதி மாணவர் உயிரிழப்பு
29-Jan-2025
விழுப்புரம், : பள்ளி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகன் கோபிநாத், 16; இவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த 30 ம் தேதி, மதியம் பள்ளிக்கு நடந்து சென்ற அவரை, விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அருண்குமார்,23; என்பவர் வழிமறித்து மொபைல் போனை பறித்துள்ளார். மேலும் கோபிநாத்திடம் 2,000 ரூபாய் பணம் கேட்டு திட்டி தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர்.
29-Jan-2025