உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 20; கடலுாரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டு பிரபாகரன் எழுந்து பார்த்தபோது, வீட்டிற்குள் புகுந்து திருடிய நபர் தப்பியோடினார். உடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து வளவனுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அந்த நபர், வானுார் அடுத்த ஆட்சிப்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார், 40; என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, வீட்டில் திருடிய மொபைல் போன் உட்பட 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ