உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி டிரைவரிடம் வழிப்பறி; திண்டிவனத்தில் வாலிபர் கைது

லாரி டிரைவரிடம் வழிப்பறி; திண்டிவனத்தில் வாலிபர் கைது

திண்டிவனம்; திண்டிவனத்தில் காவல் நிலையம் அருகே லாரி டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் இந்திரலிங்கம், 24; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, திண்டிவனம் டவுன் காவல் நிலையம் அருகே உள்ள லாரி புக்கிங் ஆபீசில், தர்பூசணி லோடு ஏற்றுவதற்காக லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார்.அப்போது, அங்கு வந்த வாலிபர், டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 1,400 ரூபாய், மொபைல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.இந்திரலிங்கம் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார், புக்கிங் அலுவலக பகுதியில் உள்ள சி.சி.டி.வி., புட்டேஜை ஆய்வு செய்தனர். அதில், திண்டிவனம் கிடங்கல் (2) எலி என்கிற அஜய்ராஜ், 26; என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ