உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், அண்ணா நகர் பகுதியில், டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கே.கே.,ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல், 25; என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 19; என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்