உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சாலாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் 200 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், சாலாமேடு ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெபி, 24; என தெரிந்தது. உடன், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெபியை கைது செய்தனர்.மேலும், கஞ்சா கடத்தலுக்கு தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 50; என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ