உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவிக்கு டார்ச்சர் போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு டார்ச்சர் போக்சோவில் வாலிபர் கைது

செஞ்சி,; பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.மேல்மலையனுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், கடந்த 10ம் தேதி பள்ளிக்கு வந்த போது, பின் தொடர்ந்து வந்த மேலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ஆதிகேசவன் 22; வழி மறித்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்து, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து ஆதிகேசவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை