உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரை தாக்கி செயின் பறிப்பு

வாலிபரை தாக்கி செயின் பறிப்பு

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே வாலிபரை தாக்கி, செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கொருக்குப்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் மகன் சின்னமணி, 27; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 12ம் தேதி நண்பர் திருமணத்திற்காக கோட்டக்குப்பம் வந்தார். மறுநாள் மாலை சென்னைக்கு செல்ல, கோட்டக்குப்பம் ரவுண்டானா வந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் அவரை இடிப்பது போல் வந்தனர். இதனை அவர் தட்டிக்கேட்டார். அப்போது பைக்கில் மூவரும், சின்னமணியை சரமாரியாக தாக்கினர். அப்போது அவரது கழுத்தில் இருந்த தங்க செயின் இரண்டாக அறுந்து கீழே விழுந்தது. அந்த செயினின் ஒரு பாதியை பைக்கில் வந்தவர்கள் எடுத்துக்கொண்டு மாயமாகினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை