பைக் மோதி வாலிபர் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையை கடந்தவர் பைக் மோதி இறந்தார். விழுப்புரம், முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் கலைசெல்வன், 28; இவர், நேற்று முன்தினம் சித்தேரிக்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை கடந்தபோது, விழுப்புரம் - சென்னை நோக்கி மதுவிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு, 38; என்பவர் ஓட்டி வந்த பைக், கலைச்செல்வன் மீது மோதியது. படுகாயமடைந்த கலைச்செல்வன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.