உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 28: கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தனது ஸ்பிளண்டர் பைக்கில் செஞ்சி நோக்கி சென்றார். லட்சுமிபுரம் அருகே சென்ற போது எதிரே விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை