உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் வாலிபர் பலி 

பைக் விபத்தில் வாலிபர் பலி 

வானுார் : கிளியனுார் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய வாலிபர் இறந் தார். கிளியனுார் அடுத்த அருவாப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்ராஜ், 29; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, திண்டிவனத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், எறையானுார் தனியார் பள்ளி சந்திப்பில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததில் பின்னால் சென்ற விக்னேஷ்ராஜ் பைக் மோதியது. இதில், விக்னேஷ்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி