உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் பலாத்கார முயற்சி வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

பெண் பலாத்கார முயற்சி வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம் : செஞ்சி அருகே, பெண்ணை பாலியர் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மரியநாதன் மகன் ராஜதுரை, 25; இவர், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த ராஜதுரை, அவரின் வாய், காதை கடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சத்தியமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து ராஜதுரையை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாற்றப்பட்ட ராஜதுரைக்கு, 3 ஆண்டு சிறையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ