உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

விழுப்புரம்: கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, முத்தமிழ்நகரை சேர்ந்த சசிகுமார் மகன்கள் சூர்யபிரகாஷ், 25; விஷ்வா, 23; ரசாக் லேவுட் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் கிருஷ்ணகுமார், 19; ஆகியோர், அந்த பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. விழுப்புரம் டவுன் போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 300 ரூபாயை பறிமுதல் செய்து, சூர்யபிரகாஷ், விஷ்வா ஆகியோரை கைது செய்தனர். கிருஷ்ணகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !