| ADDED : மார் 30, 2024 06:04 AM
சேத்துார், : தேவதானம் கிராமம் வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், கோவிலுார் என மூன்று கிராம பகுதிகளை உள்ளடக்கியது. மெயின் ரோட்டில் இருந்து சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம், பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில், சாஸ்தா கோயில், வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்த சாஸ்தா கோயில் ஆறு என வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும்படியான கோயில்கள் சுற்றுலா தளங்கள் உள்ளன.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவதானம் மெயின் ரோட்டில் இடைவிடாத வாகனங்கள் போக்குவரத்து அதிகம். கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை பஸ் ஸ்டாப்பில் நிழற் குடை வசதி இதுவரை ஏற்படுத்தவில்லை. கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் அதிக மக்கள் கூடும் பஸ்நிறுத்தத்தில் பள்ளி மாணவிகள், முதியோர், பெண்கள் பாதிக்கின்றனர். அதிக வெயில், மழை நேரங்களில் நனையாமல் தப்ப எதிர் பகுதி கடைகளின் தாழ்வாரங்களில் ஒதுங்கி இருந்து பஸ் வரும்போது ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.