உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / --குறுகலான பாலத்தால் தொடரும் உயிர்பலி -- ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

--குறுகலான பாலத்தால் தொடரும் உயிர்பலி -- ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகரை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறுகலான தரைப்பாலத்தால் இரண்டு ஆண்டுகள் 10க்கும் மேற்பட்ட விபத்துக்களும் தொடர் உயிர்பலிகளும் நடந்துள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்ய மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராஜபாளையம் வழியே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கேரளா செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளதால் வாகன போக்குவரத்து 24 மணி நேரம் அதிகமிருக்கும். தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் விதமாக சேத்துார், தேவதானம், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள 8 பெரிய நீர்வழிப்பாதை, பாலங்களை அகலப்படுத்தும் பணி நடந்து முடிந்தது. ஆனால் சிறிய அளவிலான நீர்வழிப் பாதைகளில் உள்ள பாலங்களை அகலப்படுத்தாமல் வைத்துள்ளனர். ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் மாயூர நாத சுவாமி கோயில் வரை பெட்ரோல் பங்க், இரண்டு லாரி எடை மேடை, பெரும்பாலான டூவீலர் ஷோரூம்கள் அத்துடன் இரண்டு பக்கமும் லாரிகள் அணிவகுத்து நிற்பதால் இதன் இடையே உள்ள குறுகலான பாதை போன்றவை விபத்திற்கு வழிவகுக்கிறது. இரண்டு நாள் முன்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாலை அகலப்படுத்தாததால் 2 ஆண்டுகளில் 10க்கும் அதிகமான வாகன விபத்தும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. தொடரும் விபத்தை தடுக்க குறுகலான பாலப்பகுதியில் ரோட்டை அகலப்படுத்துவதுடன் சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி