போக்குவரத்து போலீசுக்கு டார்கெட் : அதிகாரிகளின் அழுத்தத்தால் பரிதவிப்பு
மாவட்டத்தில் மக்கள்தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரிப்பதை போல் டூவீலர், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் நகரின் முக்கிய வீதிகள், கிராமங்களில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.அருப்புக்கோட்டை 10, விருதுநகர் 10, சிவகாசி 20, சாத்துார் 20, ஸ்ரீவில்லிப்புத்துார் 10, ராஜபாளையம்20 என மொத்தம் 90 போக்குவரத்து போலீசார் மட்டுமே மாவட்டத்தில் உள்ளனர். அதிலும் விருதுநகரில் 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 1990ல் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளது.மாவட்டம் முழுவதும்ஹெல்மட் அணிவது, லைசென்ஸ், இன்ஸ்சூரன்ஸ் ஆவணங்கள் இருக்கிறதா என டூவீலர்வாகன ஓட்டிகளிடம் காலை முதல் மாலை வரை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.ஆனால் காரில் சீட் பெல்ட் அணிவது, லைசென்ஸ், இன்ஸ்சூரன்ஸ் ஆகிய ஆவணங்கள்இருப்பது குறித்து தேர்தல்நேரத்தில் மட்டுமே சோதனை செய்கின்றனர்.மற்ற நேரங்களில் எவ்வித சோதனையும் செய்வதில்லை.தற்போது போக்குவரத்து போலீசாருக்கு தினசரி டார்கெட் வாய்மொழி உத்தரவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தினசரி வாகன சோதனை அபராதம், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மது போதை வாகன ஓட்டிகளிடம் தினசரி ஒருவர் ஒன்றையாவது அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.போக்குவரத்து பிரிவில்பெண் போலீசாரும் பணிபுரிகின்றனர். இந்த வாய்மொழி உத்தரவால் பெண் போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். அபராதம் விதிக்க முடியவில்லை என்றால் உயர் அதிகாரிகள் கண்டிக்கின்றனர்.மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாரில் உள்ள பற்றாக்குறையை சரிசெய்யாமல் அபராதம்விதிக்க கட்டாயப்படுத்துவதாக போலீசார் புலம்புகின்றனர்.