உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டை தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்

அருப்புக்கோட்டை தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்

அருப்புக்கோட்டை: லோக்சபா தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளோம், என அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன் ,ராஜேஸ்வரி இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் அஜய் வாசுதேவன், காவியா ஆகியோரை வாழ்த்தி பழனிச்சாமி பேசியதாவது:அருப்புக்கோட்டை என்று சொன்னால் எம்.ஜிஆர் நின்று வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஆன தொகுதி. லோக்சபா தேர்தலில் எடப்பாடி சட்டசபை தொகுதியில் 46 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளோம். அதற்கடுத்த படியாக அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளோம். என பேசினார்.விழாவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் கடம்பூர் ராஜு, வைத்தியலிங்கம், பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிவசாமி, ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
செப் 07, 2024 10:35

அன்றைய அருப்புக்கோட்டை தொகுதியில் எழுபத்தியெலாம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாரதராதனா எம்ஜி ஆ ர் போட்டியிட்டு வென்றார். அவரை எதிர்த்த சிவசாமி ஜனதாதள கட்சி விட சுமர் முப்பாத்திரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். திரு பஞ்சவர்ணம் , தலைவரின் ஏஜென்ட் வெற்றி கடிதம் பெறும்வரை நான் இருந்தேன். தலைவருக்கு அன்றையநாளில் இளைனர்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்தோம் அருப்புக்கோட்டை முதன்முதலில் எம் ஜி ஆர் , இரட்டை இல்லை சீனத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்றார். எனக்கு இன்றளவும் மட்டற்ற மகிழ்ச்சி


முக்கிய வீடியோ