வேன் கவிழ்ந்து 3 பேர் காயம்
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகாராஜபுரத்திற்கு சென்ற மில்வேன் நேற்று காலை 8:00 மணிக்கு மூலக்கரை கண்மாய் கரையோரத்தில் 15 அடி ஆழமுள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சரவணன் 20, தொழிலாளர்கள் காதுல் 43, காந்திமதி 39 காயம் அடைந்தனர். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். கூமாபட்டி போலீசார் விசாரித்தனர்.