3 ஆயிரம் பெண்கள் ‛ஆரி ஒர்க் சாதனை
விருதுநகர்; விருதுநகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பெண்கள் ஒன்று திரண்டு எம்பிராய்டரிங்கான 'ஆரி ஒர்க்' செய்த சாதனை நிகழ்ச்சி நடந்தது.இந்திய 'ஆரி ஒர்க்' தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதலாவது மாநாடு வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நடந்தது. இதில் சங்கத் தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் சின்னதிரை நடிகை அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, சுஜிசித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் பெண்கள் 1.30 மணி நேரத்தில் ஆரி ஒர்க் செய்து சாதனை படைத்தனர். இச்சாதனையை பதிவு செய்து அதற்கான சான்றிதழை நோபிள் உலக சாதனை அமைப்பினர் வழங்கினர்.