கடையில் தகராறு 4 பேர் கைது
காரியாபட்டி: காரியாபட்டியில், மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூரை சேர்ந்த மாதவன்.நேற்று முன்தினம் இரவு 10;00 மணிக்கு முடியனூர் ராகேஷ், கல்குறிச்சி கஜேந்திரன், தண்டீஸ்வரன், மதுரை வெங்கடேஷ் டீ குடிக்க வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கடையில் இருந்த பிளாஸ்டிக் சேர், டேபிள், கண்ணாடி பாட்டில்களை உடைத்தனர்.இதனை தட்டிக் கேட்ட மாதவனையும், டீ குடித்துக் கொண்டிருந்த ரமேஷ்பாபுவையும் தாக்கியதில் காயம் அடைந்தனர். காரியாபட்டி போலீசார் 4 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.