உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்

ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்

விருதுநகர் : மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூ. 42 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க மின்சாரம், இதர ஆற்றல் மூலங்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடந்தது. ஆற்றல் தணிக்கையாளர் செந்தில்குமார், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சரவணன் தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதுநிலை தலைவர் பிருந்தாவன், தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவி, மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் கலைச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் தொழில் மைய பொது மேலாளர் பேசியதாவது: அரசு ஆற்றல் தணிக்கை, ஆற்றல் சேமிப்பு மேம்படுத்தும் திட்டம் 2021 முதல் செயல்படுகிறது. இந்த திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூ. 42 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !