உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டி வீட்டில் 5 அரை பவுன் மாயம்

மூதாட்டி வீட்டில் 5 அரை பவுன் மாயம்

அருப்புக்கோட்டை: திருப்பூர் அவினாசி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள், 75, இவருடைய பூர்வீக வீடு அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ளது. பழைய வீடு என்பதால் அதை புதுப்பிக்க மார்ச் 10 ல் வந்துள்ளார். அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் அரை பவுன் மோதிரத்தை ஒரு செம்பில் வைத்து வீட்டில் வைத்துள்ளார். வீட்டை சரி செய்ய அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ராமுவிடம் சொல்லி இருந்தார். அவரும், உடன் ஒருவரை அழைத்து வந்து பணி செய்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலை சென்ற பின், செம்பில் வைத்திருந்த நகையை பார்த்த போது அதில் நகைகள் இல்லை. இதுகுறித்து, பாப்பம்பாள் கொத்தனார் ராமு, அவருடன் வந்தவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் புகார் செய்தார். கோர்ட் உத்தரவுபடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.____


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை