மேலும் செய்திகள்
நாளை (டிச. 18) மின்தடை
1 hour(s) ago
இன்று (டிச.17) மின்தடை
2 hour(s) ago
விபத்தில் மூதாட்டி பலி
2 hour(s) ago
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
பெண் எஸ்.ஐ., மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் தர்ணா
2 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பயறுவகை பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களில் மகசூல் அதிகரிக்க 2.5 ஏக்கருக்கு 25 கிலோ டை அமோனியம் பாஸ்பேட் உரம் இலை வழி தெளிப்பிற்கு தேவைப்படும். பூக்கும் நிலையிலுள்ள பயறுவகை பயிர்களில் 2 சதவித டை அமோனியம் பாஸ்பேட் உரத்தினை இலை வழி தெளிப்பாக தெளித்தால் பூக்கள் உதிர்வது குறைந்து, அதிக பூக்கள் வளர வளர்ச்சி ஊக்கியாக செயல்படும்.முதல் தெளிப்பிற்கு பின் 15 நாள்கள் இடை வெளியில் 2 சதவித டை அமோனியம் பாஸ்பேட் தெளிப்பதால் காய்கள் அனைத்தும் திரட்சியாக வளர்ந்து 30 சதவித மகசூல் அதிகரிக்கும். இலை வழி தெளிப்பாக யூரியா 1 சதவிதம் விதைத்த 30, 40 நாள்களில் தெளித்தால் பயறுவகை பயிர்களில் மகசூல் அதிகரிக்கும், என்றார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago