| ADDED : மே 11, 2024 11:09 PM
விருதுநகர்:விருதுநகரில் ஏ.டி.எம்., மிஷினில் பணம் நிரப்பும் நிறுவன ஊழியர் யோகராஜ் 26, மிஷினில் உரிய பணத்தை நிரப்பாமல் பல தவணைகளில் ரூ. 10.50 லட்சம் கையாடல் செய்ததால் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர். விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் யோகராஜ் 26. இவர் சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மிஷின்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வந்தார். இவர் வங்கியில் இருந்து மார்ச் 1ல் ரூ. 6 லட்சம், மார்ச் 11ல் ரூ. 4 லட்சம், மார்ச் 25 ல் ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை ஏ.டி.எம்., மிஷின்களில் நிரப்பாமல் கையாடல் செய்துள்ளார். மேற்கு போலீசார் யோகராஜ் மீது வழக்கு பதிந்தனர்.