அ.தி.மு.க., நிர்வாகி கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. மாவட்ட அணி நிர்வாகிகள், நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து தேர்தலில் செய்ய வேண்டிய வியூகங்கள் குறித்து பேசினார். அவருக்கு ஆலோசனை வழங்க ஆன்லைனில் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். அப்போது விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்வதாக ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்தார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.