ஊழியர்களை தாக்கி பணம் பறிக்க முயற்சி
நரிக்குடி: நரிக்குடி டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக மாரியப்பன், விற்பனையாளராக பனையூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளனர்.நேற்று முன்தினம் பணி முடித்து இருவரும் டூவீலரில் சென்றனர். கடை அருகில் 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து விற்பனை செய்த பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். பணம் இல்லாததால் ஆத்திரத்தில் 2 அலைபேசி, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை பறித்து சென்றனர். அலைபேசியை தரையில் வீசி உடைத்தனர். நரிக்குடி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.