உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தொழில், தொழிலாளர்கள் வளர்ச்சி பெறுவதற்கு பாடுபடுவேன் பா.ஜ.வேட்பாளர் நடிகை ராதிகா பேச்சு

பட்டாசு தொழில், தொழிலாளர்கள் வளர்ச்சி பெறுவதற்கு பாடுபடுவேன் பா.ஜ.வேட்பாளர் நடிகை ராதிகா பேச்சு

விருதுநகர், : பட்டாசு தொழில், தொழிலாளர்கள் வளர்ச்சி பெறுவதற்கு பாடுபடுவேன். இங்கு எந்த ஒரு உயிரும் இழக்க விடமாட்டேன்.” என விருதுநகர் லோக்சபா தொகுதி பா.ஜ.,நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக் கட்சிவேட்பாளர் ;நடிகை ராதிகா தெரிவித்தார்.விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வேட்பாளரான நடிகை ராதிகா நேற்று தொகுதிகுட்பட்ட சட்டசபை தொகுதிகளான திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி தொகுதிகளுக்குட்பட்ட பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:மோடியை மீண்டும் பிரதமராக்க நாம் போட்டியிடும் தேர்தல் இது. அவரை வெற்றி பெற செய்ய தான் நாம் இந்த களத்தில் வேலை செய்வதாக நினைத்து தாமரை சின்னத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும். நான் வரும் வழியில் உதயநிதி பேசுவதை கேட்டேன். அவர் தாத்தா கூட இதற்கு அவரை அனுமதிக்க மாட்டார். எத்தனை நாள் திராவிடம் என்று பேசி மக்களை ஏமாற்றுவீர்கள். உலகத்தில் இந்தியாவின் முகமாக தெரிவது பிரதமர் மோடி மட்டும் தான் . அரசியல் எனக்கு புதியதல்ல. இந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அளித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு விவசாயிகளுக்கு ஏன் இந்த திட்டங்கள் சென்று சேரவில்லை. இதை யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்த தொகுதியில் என்னை போட்டியிட அழைத்த போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால், சூரியவம்சம் படத்தில் சின்னராசு மனைவியை தட்டிக் கொடுப்பது போல, என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் உன் பின்னால் இருக்கிறேன். உன்னால் முடியும் என்று ஒரு பெரிய ஆலமரமாக என் கணவர் சரத்குமார் உள்ளார். உங்களால் முடியும் என மாநில தலைவர் அண்ணாமலை எனக்கு ஊக்கம் அளித்தார். மக்கள் வாழ்வாதாரத்தை நன்றாக இருக்க வேண்டும் என செயல்படும் கட்சி பா.ஜ., பெண்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வேன். பட்டாசு தொழில், தொழிலாளர்கள் வளர்ச்சி பெறுவதற்கு பாடுபடுவேன். இங்கு எந்த ஒரு உயிரும் இழக்க விடமாட்டேன். நான் உங்களில் ஒருத்தியாக சகோதரியாக இருந்து பாடுபடுவேன். தி.மு.க., அ.தி.மு.க. கூறுவது போன்று நாட்டில் உள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவது என்பது சாத்தியமில்லை. சும்மா வேண்டுமானால் கூறலாம் சாத்தியமில்லை.. என்றார்.நடிகர் சரத்குமார் பேசியதாவது: பிரதமர் மோடியை ரூ.28 பைசா என அழைப்பேன் என அமைச்சர் உதயநிதி கூறுகிறார். இது எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு. நாடு நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். நாடு சீரழிந்தால் சமுதாயம் சீரழிந்து விடும். போதைக்கு அடிமையாதல், குடிக்கு அடிமையாதல் தமிழ்நாட்டில் உள்ளது. பிரதம வேட்பாளர் யார் என தெரியாமலேயே பிரச்சாரம் செய்கின்றனர். இந்திய நாட்டை உலகறிய தெரிய செய்தவர் நமது பிரதமர். வெளிநாடு இந்தியர்களுக்கு தற்போது அதிக மரியாதை கிடைக்கிறது. இதனால்தான் அனைத்து உலக தலைவர்களும் மோடியை வந்து பார்க்கின்றனர். உறுதியான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் அது மோடியால் தான் முடியும். தி.மு.க., வில் உழைப்பவருக்கு வாய்ப்பு கிடைக்காது. 1996 ம் ஆண்டு இடை விடாது 40 நாட்கள் பிரசாரம் செய்தேன். அன்று தி.மு.க., ஆட்சியில் உட்கார சரத்குமாரின் பங்கு முக்கியமான என்பதை அந்த கட்சி மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. 40ம் நமதே, 400ம் நமதே என்ற இலக்கை நோக்கி அயராது உழைத்து, வெற்றி பெற வேண்டும். என்று பேசினார்நிகழ்ச்சிகளில் மாவட்டத்தலைவர்கள் பாண்டுரங்கன், ராஜா, உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ