உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அங்கன்வாடி அருகில் புதர்மண்டிய கட்டடம்; விஷப்பூச்சிகளால் அச்சம்

அங்கன்வாடி அருகில் புதர்மண்டிய கட்டடம்; விஷப்பூச்சிகளால் அச்சம்

விருதுநகர் : விருதுநகர் பாண்டியன் நகர் அண்ணா நகரில் அங்கன்வாடி மையம் அருகே புதர்மண்டிய கட்டடம் அமைந்துள்ளது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் ஏற்பட்டுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் பாண்டியன் நகர் அண்ணா நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகே 1998ல் கட்டப்பட்ட சத்துணவு கூடம் உள்ளது. 25 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் இது பழைய கட்டடம் என்பதால் மழைக்காலங்களில் நீர் வடிய வழியின்றி அங்கன்வாடி முன்பு தேங்குகிறது.இதனால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் பழைய கட்ட டமாக இருப்பதால் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த கட்டடத்தை இடித்து விட்டு மழைநீர் முறைப்படி வெளியேறவும், விஷப்பூச்சிகள் அச்சத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ