உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனிதவள அதிகாரிகளுக்கு திறனுாட்டும் பயிற்சி

மனிதவள அதிகாரிகளுக்கு திறனுாட்டும் பயிற்சி

சிவகாசி; சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, எவோரியா இன்போடெக் பிரைவேட் லிமிடெட், வாவ் எச்.ஆர்., சார்பில் எச்.ஆர்., கனெட்டு 2025 என்ற தலைப்பில் மனிதவள அதிகாரிகளுக்கான திறனுாட்டும் பயிற்சி சென்னையில் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமம் தாளாளர் சோலைசாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். எவோரியா இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அருண் சுந்தர், பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். கதையாளர், எழுத்தாளர் ஜானகி சபேஷ் திறன் மேம்பாட்டிற்கான உயர் ஊக்க பயிற்சி அளித்தார். பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்களில் இருந்து 93 மனிதவள அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் காசிராமன், சுதாகர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ