கல்லுாரி நாள் விழா
சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 62 வது கல்லுாரி நாள் விழா, நிறுவனர்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது கல்லுாரி ஆட்சி குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.கல்லுாரி தாளாளர் அபிரூபன் வரவேற்றார். முதல்வர் அசோக் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழக செயலாளர் வின்சென்ட் பேசினார். பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. விளையாட்டு, தேசிய மாணவர் படையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பல்வேறு விருதுகளை பெற்ற பேராசிரியர்கள், ஆய்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி செயலர் அய்யன் கோடீஸ்வரன், நிர்வாக உறுப்பினர் அதிபதி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி கல்பனா தேவி நன்றி கூறினார்.