உள்ளூர் செய்திகள்

கல்லுாரி செய்தி

பேராசிரியர்களுக்கு இணையவழி பயிற்சிசாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இணைய வழி 5 நாள் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.கட்டுமான தொழில்நுட்பத்தில் 3டி பிரிண்டிங் என்ற தலைப்பில் செப். 2 முதல் 6 வரை நடந்தது.எல்அன் டி கட்டுமான ஆராய்ச்சி மையத்தின் உதவி மேலாளர்தயாலினி பாலசுப்பிரமணியன் ,திருப்பதி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் , ராகுல் ,சென்னை ட்வஸ்தாவணிகபொருள்நிறுவன தலைவர் சாந்தனு பட்டாச்சார்ஜி ,சென்னை சி. எஸ். ஐ .ஆர் .எஸ் . இ. ஆர். சி. முதன்மை விஞ்ஞானி பிரதாப் ரஞ்சன் பிரேம் ,வேலுார் தொழில்நுட்ப பல்கலை, பேராசிரியர் ஜெயபிரகாஷ் பேசினார்.நாடு முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைய வழியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் செல்லா கிப்டா ,ஹர்ஷினி ,துறைபேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !