உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள், மேற்பகுதி சேதமடைந்துள்ளது.சேதமடைந்த இத்தொட்டியின் அருகே ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தபால் நிலையம் இயங்குகின்றன. இதனால் எப்பொழுதுமே இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். தவிர இப்பகுதி குழந்தைகளும் விபரீதம் அறியாமல் தொட்டியின் அருகிலேயே விளையாடுகின்றனர். மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதம் அடைந்த மேல்நிலைத் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை