மேலும் செய்திகள்
வாசகர்கள் மனதில் நீங்கா இதழ்
06-Sep-2024
சாத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சத்திரப்பட்டி-ஓ.மேட்டுப்பட்டி ரோடு புதியதாக போடப்பட்டது.சாத்துார் அயன் சந்திரப் பட்டியில் இருந்து ஓ.மேட்டுப்பட்டிக்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. மேலும் குடியிருப்பு வீடுகளில் இருந்து கழிவு நீர் ரோட்டில் தேங்கியதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டது.பள்ளமானரோட்டில் மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து சாத்துார் ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் காமேஸ்வரி, மகேஸ்வரன், இந்தசாலையை ஆய்வு செய்து புதியரோடு போட நடவடிக்கை எடுத்தனர். குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தரோடு தற்போது புதியதார் சாலை போடப்பட்டு இருப்பதால் இந்தபகுதி மக்கள்மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
06-Sep-2024