உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மின் மயான பணி

சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மின் மயான பணி

சாத்துார்: சாத்துார் நகராட்சியில் மின் மயானம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சாத்துார் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானம் நென்மேனி ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்குக்கு அருகில் உள்ளது.பொது மின் மயானம் அமைக்க இடம் நகராட்சியிடம் இல்லாத நிலையில் சாத்துார் நகராட்சி தலைவர் குருசாமியின் முயற்சியால் இந்த இடம் தனியாரிடமிருந்து நகராட்சிக்கு தானமாக தரப்பட்டது. நகராட்சிக்கு என பொது மின் மயானம் இல்லாத நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் உடல்கள் எரியூட்டபட்டும் புதைக்கப்பட்டும் வந்தது.தற்போது தானமாக பெறப்பட்ட இடத்தில் மின் மயானம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது தற்போது வரை பணி நிறைவடையவில்லை. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பொது மின் மயானம் அமைக்கும் பணியை விரைவு படுத்திட வேண்டும்.மேலும் இங்கு இறுதிச்சடங்கு செய்ய வரும் மக்கள் இறுதிச் சடங்குகள் செய்யவும் குளிப்பதற்கும் தண்ணீர் தொட்டி கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ