உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்டுடியோவில் தீ விபத்து

ஸ்டுடியோவில் தீ விபத்து

ராஜபாளையம், ஜூலை 25- ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ் 35, டி.பி மில்ஸ் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று இரவு 7:00 மணிக்கு ஊழியர்கள் கடையை பூட்டி அருகே இருந்த டீ கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஸ்டுடியோவில் இருந்த பொருள்கள் தீ பற்றி எரிந்தது . தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த ஜெராக்ஸ், கேமரா, கிப்ட் பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்து காரணமாக டி.பி மில்ஸ் மெயின் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை