உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு உயர்கல்வி வாய்ப்பு

மாணவர் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு உயர்கல்வி வாய்ப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான குறைதீர் கூட்டம் நடந்தது.20230-24 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறதா மாணவர்களை கல்லுாரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்க்கும் விதமாக நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது.தனித்தனியாக மாணவர்களிடம் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கலெக்டர் ஜெயசீலன் கேட்டார். 7 மாணவர்களுக்கு தனியார் கலை கல்லுாரியிலும், 8 மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கான கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை