மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று
24-Jan-2025
சிவகாசி : சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசு சார்பில் ரூ.32.5 கோடி மதிப்பில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல மையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் , ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சை பிரிவு, ரூ.8.79 கோடியில் தாய் சேய் நல மையம் கட்டுமான பணிக்கு 2024 பிப். 25ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டடம் 70,321 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.இதில் மருத்துவ ஆய்வகம், எக்ஸ்லாம் சியா ஆய்வகம், 26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரவு, தாய்ப்பால் வங்கி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 4 அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவை அமைய உள்ளது.இதன் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 139 படுக்கை வசதிகள், பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக விரிவடையும். 18 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஓராண்டிற்குள் கட்டுமான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே சமயத்தில் மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்புவதுடன் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Jan-2025