உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியின் மாணவர் பேரவை சார்பில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு இளம் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்து வாழ்த்தினார். உடற்கல்வித்துறை இயக்குனர் விஜயகுமாரி, பாடத்திட்ட குழு புல முதன்மையர் தீபா ,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜமணி, வேலை வாய்ப்பு திட்டம் குழு பொன்மலர் ,கணினி பயன்பாட்டியல் உதவி பேராசிரியர் வந்தனா, இளம் தொழில் முனைவோர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பிரசன்னா தேவி, சன் மிஸ்டா, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் சத்யா, நுாலகர் யாஸ்மின், ஆற்றுப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி சமூக நலப்பணி பாடம் ஒருங்கிணைப்பாளர் விஜய் பிரியா பேசினர். அனைத்து துறையைச் சார்ந்த இளநிலை, முதுநிலை மாணவிகள் 935 பேர் பங்கேற்றனர்.தமிழ் துறை உதவி பேராசிரியர் கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிதா, மாணவர் பேரவை பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ