உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரே நாளில் 654 பஸ்களை ஆய்வு செய்வது சாத்தியமா கவனக்குறைவு ஏற்பட்டால் கண்துடைப்பாக மாறும் அபாயம்

ஒரே நாளில் 654 பஸ்களை ஆய்வு செய்வது சாத்தியமா கவனக்குறைவு ஏற்பட்டால் கண்துடைப்பாக மாறும் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்நேற்று ஒரே நாளில் 654பஸ்களை ஆய்வு செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன் தாலுகா வாரியாக ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் இப்போது ஒரே நாளில் இத்தனை வாகனங்களை ஆய்வு செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆய்வில் கவனக்குறைவு ஏற்பட்டால் கண்துடைப்பாக மாறும் அபாயமும் உள்ளது.ஆண்டுதோறும் பள்ளி பஸ்கள் மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து கூட்டாய்வு செய்யும். முன்பு இந்த ஆய்வு தாலுகா அளவில் நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து பஸ்களும் பரிசோதிக்கப்பட்டன.ஆனால் தற்போது ஆயுதப்படை மைதானத்திற்கு அனைத்து பஸ்களும்கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 151 பள்ளிகளில் 779வாகனங்களுக்கு வாகன அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஆய்வில் 654வாகனங்களில் 592முழு தகுதியும், 62வாகனங்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பபட்டன.மீதமுள்ள 125வாகனங்கள் தகுதி பெற ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கம் செய்யப்பட்டு வரவுள்ளன . கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், இளங்கோ பங்கேற்றனர்.நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, உரிய நடத்துனர் உரிமம் பெற்ற உதவியாளர் டிரைவருக்கு உதவியாக செயல்படுகிறாரா, மாணவர்கள் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ.,ல் இருந்து 30 செ.மீ.,க்குள் உள்ளதா, டிரைவரின் இருக்கைப்பகுதி தனியாக இருக்கிறதா, இருக்கைகள் தரைத்தளத்ததுடன் போல்ட் மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைக்க தனியாக ரேக் அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் தரத்துடன் உள்ளதா, பக்கவாட்டு ஜன்னல்களில் மாணவர்கள் வெளியே கரம் நீட்டாதவாறு தடுக்க கிடைமட்ட கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதா என 11 வகைகளில் ஆய்வு நடந்தது.முன்பு இந்த ஆய்வு தாலுகா அளவில் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது ஒரே நாளில் ஒரே இடத்தில் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. குறைந்த அலுவலர்களே உள்ள நிலையில் 654 பஸ்களையும் ஒரே நாளில் ஆய்வு செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் கண்துடைப்பு என குற்றம் சாட்ட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் முன்பு தாலுகா வாரியாக நடத்தியது போல் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர்கூறியதாவது: ஆய்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்தந்த பள்ளிகளுக்கு பஸ்களை ஆய்வுக்கு அனுப்ப அறிவிப்பு கொடுப்போம். அந்த நாளில் இருந்தே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்றுஆய்வைதுவங்கி விடுவர்.இது நாள் வரை தினசரி ஆய்வு நடந்துள்ளது. 11 தர நிர்ணயங்கள்ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும். ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்து வர அறிவுறுத்தப்படும். மீதமுள்ள வாகனங்களை மாவட்ட ஆய்வில் ஆய்வு செய்துவிடுவோம். கவனக்குறைவுக்கு வாய்ப்பே இல்லை. மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாகனத்தையும் கவனத்தோடு தான் ஆய்வு செய்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை