உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 6 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணை மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

6 அடியாக உயர்ந்த கோல்வார்பட்டி அணை மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் கோல்வார்பட்டி அணையில் தொடர் மழையால் 6 அடி நீர் மட்டம் உயர்ந்துஉள்ளது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் அர்ச்சுனா நதியின் குறுக்கே கட்டப்பட்ட கோல்வார்பட்டி அணையின்மூலம் 4300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.கடந்த ஆண்டு பருவ மழை காலம் கடந்து பெய்தாலும் அதிகமான அளவு மழைப்பொழிவு இருந்ததால் கோல்வார்பட்டி அணை முழு கொள்ளளவை எட்டியது.இதன் காரணமாக அணையின் மூலம் பாசன வசதி பெறும் சிறுக்குளம், நத்தத்துப்பட்டி, கலிங்கமேட்டுப்பட்டி, மேலமடை கிராம மக்கள்விவசாய பணிகளை மேற்கொண்டனர்.இந்த வருடமும் நல்ல மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோல்வார்பட்டி அணையில் 4 அடியாக இருந்த நீர்மட்டம் 6 அடியாக உயர்ந்து உள்ளது.அணையின் மொத்த கொள்ளளவு 18 அடி. தொடர்ந்து பருவ மழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !