மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்
30-Jan-2025
திருச்சுழி : திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் விடுதி சேதமடைந்தும், கழிப்பறை கதவு உடைந்தும், குடிநீர் இன்றியும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எம். ரெட்டியபட்டியில் 2017ல், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல துறை மூலம் 83.50 லட்சம் நிதியில் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இதில், சாயல்குடி, பெருநாழி, மண்டபசாலை, அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது 40 மாணவர்கள் உள்ளனர்.விடுதி முறையான பராமரிப்பு இல்லாததால் கட்ட டம் பல பகுதிகளில் சேதமடைந்து உள்ளது. கழிப்பறை கதவுகள் உடைந்து மூட முடியாமல் உள்ளதால் மாணவர்கள் செல்ல தயக்கமாக உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு உரிய கழிப்பறையில் கதவுகள் இல்லை. மாணவர்கள் குடிக்க குடிநீர் இல்லை. விடுதியின் சுற்று சுவர் சேதமடைந்துள்ளது. கேட் இல்லை. புழக்கத்திற்கு குழாய் இருந்தும் தண்ணீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி விடுதியில் தேவையான பராமரிப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Jan-2025