மேலும் செய்திகள்
பொது கடையில் குட்கா விற்றவர் கைது
16-Feb-2025
சிவகாசி: விருதுநகர்மாவட்டம் சிவகாசியில் டீக்கடையில் பணத்தை திருடும் நபரின் வீடியோ காட்சியும், சிக்கிய அவரை அடிப்பதும் வைரல் ஆகி வருகிறது.சிவகாசி ஞானகிரி ரோட்டில் நவீன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. அதே பகுதியில் சுற்றித் திரியும் ஆறுமுகம் 50, என்பவர் டீக்கடை உள்ளிட்ட அருகருகே உள்ள கடைகளில் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்து ஊதியத்தையும் உணவையும் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று காலை டீக்கடையில் உள்ள கல்லாவில் யாருமில்லாததை அறிந்து நோட்டமிட்ட ஆறுமுகம், அதில் இருந்து 2 முறை ரூபாய் நோட்டுகளை எடுத்து திருடி தனது பாக்கெட்டில் வைக்கும் காட்சி டீக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதோடு, சமூக வலைதளத்திலும் பரவியது.இதனால் டீக்கடை பணியாளர்கள் ஆறுமுகத்தை தேடி பிடித்து அடித்து உதைத்ததோடு அவர் திருடிய ரூ.620 ஐ பறிமுதல் செய்தனர். இந்தக் காட்சியும் வைரலானது. போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Feb-2025