உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாரல் மழையால் மா விவசாயிகள் மகிழ்ச்சி

சாரல் மழையால் மா விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம்; ராஜபாளையத்தில் நேற்று பெய்த திடீர் சாரல் மலையால் மா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், சேத்துார், தேவதானம், சுந்தர்ராஜபுரம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. பகுதியில் விளையும் சப்பட்டை, பஞ்சவர்ணம் ரக மாங்காய்களுக்கு வெளிநாடு, வெளிமாநில வியாபாரிகள் வரை நல்ல வரவேற்பு உள்ளது. மார்கழி மாதத்தில் துவங்கி மா மரங்களில் இரண்டு முறை பூக்கள் பூத்துள்ள நிலையில் கடைசி பூக்கள் அதிக அளவில் தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் மா விளைச்சல் நன்றாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இது குறித்து விவசாயி ராஜாலிங்க ராஜா: மூன்றாவது பூ பருவத்தின் போது பெய்யும் மழையானது விளைச்சல் அதிகரிக்க வழி வகுக்கும். ஏற்கனவே மழை அறிவிப்பு இருந்த நிலையில் சேத்துார் தேவதானம் பகுதிகளில் ஓரளவு மழையும் ராஜபாளையம் பகுதிகளில் பரவலாகவும் சாரல் மழை இருந்தது. மழை அறிகுறி தொடர்வதால் இந்த பூ பருவத்தில் மழை அறிகுறி தொடர்வதால் மா விளைச்சல் கை கொடுக்கும் என நம்புகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை